• Sep 07 2026

வெருகல் பிரதேச செயலகத்தில் இன்று மக்கள் நலன் கருதி நடமாடும் சேவை!

dorin / Sep 7th 2026, 3:59 pm
image

வெருகல் பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று (07) நடைபெற்றது.

வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புதிய அடையாள அட்டை பெற்றுக்கொடுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள அடையாள அட்டைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும், முதியோர் அடையாள அட்டை வழங்குதல், பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் காலம் கடந்த திருமணப் பதிவுகளை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அரச சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இதன் மூலம் பிரதேச மக்களின் நீண்டகால தேவைகள் பல ஒரே இடத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், அரச சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் மக்களுக்கு கிடைத்தது.

வெருகல் பிரதேச செயலகத்தில் இன்று மக்கள் நலன் கருதி நடமாடும் சேவை வெருகல் பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று (07) நடைபெற்றது.வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புதிய அடையாள அட்டை பெற்றுக்கொடுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள அடையாள அட்டைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.மேலும், முதியோர் அடையாள அட்டை வழங்குதல், பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் காலம் கடந்த திருமணப் பதிவுகளை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அரச சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.இதன் மூலம் பிரதேச மக்களின் நீண்டகால தேவைகள் பல ஒரே இடத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், அரச சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் மக்களுக்கு கிடைத்தது.

Advertisement

Advertisement

Advertisement