• Jan 25 2025

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவர் மொஹமட் இல்யாஸ்; சபையில் சஜித் உரை..!

Sharmi / Jan 24th 2025, 3:51 pm
image

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவர் தான் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மொஹமட் இல்யாஸ் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருக்மன் சேனாநாயக்க, ரொஜினோல்ட் பெரேரா, சிறினால் த மெல் மற்றும் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை உரைகள் இன்றையதினம்(24) பாராளுமன்றில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றும் போதே எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ருக்மன் சேனாநாயக்க, நமது நாட்டிலுள்ள பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். 

சுதந்திரத்திற்காக பெரும் பணியாற்றிய மகாமான்ய டி.எஸ்.சேனாநாயக்கவின் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். 

பட்டினியால் வாடும் மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றிய மக்களுக்கே சோறு அளித்தவர் என்னும் பெயர் பெற்றார். 

தந்தை என அழைக்கப்படும் டட்லி சேனநாயக்கவின் குடும்ப உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தார். 

பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் பெரும் சேவைகளை ஆற்றியுள்ளார்.

88/89 களில் நாட்டில் இளைஞர்கள் போராட்டம் நடந்தபோது இளைஞர்களுடன் கலந்துரையாடி புரிந்துணர்வை ஏற்படுத்தியவர். 

சாதாரண மக்களுக்காக தனது சொந்த வளங்களையும், சொத்துக்களையும் அர்ப்பணித்தவர். 

வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர் என்று அவரை வர்ணிக்க முடியும்.

சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும் நமது நாட்டின் வனவிலங்கு வளங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தினார். பல தேசிய வனங்களை அபிவிருத்தி செய்ததன் மூலம் நாடு இன்று அதனது நன்மைகளை கண்டு வருகிறது.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவர் தான் ஐதுருஸ் மொஹம்மது இல்யாஸ் ஆவார்.

ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். யுத்த சூழ்நிலையில் யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு முதலான பிரதேச மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். 

இவ்வாறு வெளியேற்றப்பட்ட அகதி சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றம் ஆணை அவருக்கு கிடைத்தது. 

அவர் தனது தொழிலால் மருத்துவராக இலவச மருத்துவ சேவைகளை வழங்கினார். கல்வித் துறையைக் கட்டியெழுப்ப பாடுபட்டார்.

வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்கி பெரும் சேவைகளை ஆற்றினார். 

அவ்வாறே, ரயில் சேவையை ஆரம்பிக்கவும், விவசாயத்துறையில் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தார். 

மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை அமைதியான போராட்டங்களாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார் என தெரிவித்தார். 


வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவர் மொஹமட் இல்யாஸ்; சபையில் சஜித் உரை. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவர் தான் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மொஹமட் இல்யாஸ் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருக்மன் சேனாநாயக்க, ரொஜினோல்ட் பெரேரா, சிறினால் த மெல் மற்றும் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை உரைகள் இன்றையதினம்(24) பாராளுமன்றில் இடம்பெற்றது.இதன்போது உரையாற்றும் போதே எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ருக்மன் சேனாநாயக்க, நமது நாட்டிலுள்ள பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். சுதந்திரத்திற்காக பெரும் பணியாற்றிய மகாமான்ய டி.எஸ்.சேனாநாயக்கவின் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். பட்டினியால் வாடும் மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றிய மக்களுக்கே சோறு அளித்தவர் என்னும் பெயர் பெற்றார். தந்தை என அழைக்கப்படும் டட்லி சேனநாயக்கவின் குடும்ப உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தார். பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் பெரும் சேவைகளை ஆற்றியுள்ளார்.88/89 களில் நாட்டில் இளைஞர்கள் போராட்டம் நடந்தபோது இளைஞர்களுடன் கலந்துரையாடி புரிந்துணர்வை ஏற்படுத்தியவர். சாதாரண மக்களுக்காக தனது சொந்த வளங்களையும், சொத்துக்களையும் அர்ப்பணித்தவர். வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர் என்று அவரை வர்ணிக்க முடியும்.சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும் நமது நாட்டின் வனவிலங்கு வளங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தினார். பல தேசிய வனங்களை அபிவிருத்தி செய்ததன் மூலம் நாடு இன்று அதனது நன்மைகளை கண்டு வருகிறது.வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவர் தான் ஐதுருஸ் மொஹம்மது இல்யாஸ் ஆவார்.ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். யுத்த சூழ்நிலையில் யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு முதலான பிரதேச மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட அகதி சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றம் ஆணை அவருக்கு கிடைத்தது. அவர் தனது தொழிலால் மருத்துவராக இலவச மருத்துவ சேவைகளை வழங்கினார். கல்வித் துறையைக் கட்டியெழுப்ப பாடுபட்டார்.வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்கி பெரும் சேவைகளை ஆற்றினார். அவ்வாறே, ரயில் சேவையை ஆரம்பிக்கவும், விவசாயத்துறையில் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தார். மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை அமைதியான போராட்டங்களாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார் என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement