• Sep 21 2024

இலங்கையில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம்! பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்

Chithra / Feb 11th 2023, 7:10 am
image

Advertisement

இலங்கையின் புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய-அவுஸ்திரேலிய தட்டு உடைந்ததால் ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தோ - அவுஸ்திரேலிய தட்டுக்கு நடுவே நடக்கும் இந்த உடைப்பு கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக மிக வேகமாக நடந்து வருவதாகவும், வெடிப்பு ஏற்படும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நாடு இலங்கை என்றும் பேராசிரியர் கூறுயுள்ளார்.


இதன் காரணமாக நாடு தொடர்ந்து இதுபோன்ற சிறிய நிலநடுக்கங்களை உணர்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சிறிய நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், இலங்கையில் இருந்து சுமார் 1000 மைல் தொலைவில் உள்ள இந்த தட்டு உடைவதால், எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் மேலும் பல சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் எனவும் மூத்த பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம் பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல் இலங்கையின் புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய-அவுஸ்திரேலிய தட்டு உடைந்ததால் ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இந்தோ - அவுஸ்திரேலிய தட்டுக்கு நடுவே நடக்கும் இந்த உடைப்பு கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக மிக வேகமாக நடந்து வருவதாகவும், வெடிப்பு ஏற்படும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நாடு இலங்கை என்றும் பேராசிரியர் கூறுயுள்ளார்.இதன் காரணமாக நாடு தொடர்ந்து இதுபோன்ற சிறிய நிலநடுக்கங்களை உணர்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சிறிய நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், இலங்கையில் இருந்து சுமார் 1000 மைல் தொலைவில் உள்ள இந்த தட்டு உடைவதால், எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் மேலும் பல சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் எனவும் மூத்த பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement