• Jan 16 2025

கடந்த 5 வருடங்களில் விபத்தால் பறிபோன 12 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள்

Chithra / Jan 6th 2025, 7:57 am
image


கடந்த 5 வருடங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 12 ஆயிரத்து 140 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டில் 2,363 பேரும், 2021 ஆம் ஆண்டில் 2,557 பேரும், 2022 ஆம் ஆண்டில் 2, 540 பேரும் வீதி விபத்துக்களால் பலியாகியுள்ளனர். 

அத்துடன், 2023 ஆம் ஆண்டு 2,321 பேரும், கடந்த வருடத்தில் 2,359 பேரும் உயிரிழந்துள்ளனர். 

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை  198 பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 50 பேருந்துகளும், 148 தனியார் பேருந்துகளும் விபத்துக்குள்ளாகியுள்ளன.


கடந்த 5 வருடங்களில் விபத்தால் பறிபோன 12 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் கடந்த 5 வருடங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 12 ஆயிரத்து 140 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 2,363 பேரும், 2021 ஆம் ஆண்டில் 2,557 பேரும், 2022 ஆம் ஆண்டில் 2, 540 பேரும் வீதி விபத்துக்களால் பலியாகியுள்ளனர். அத்துடன், 2023 ஆம் ஆண்டு 2,321 பேரும், கடந்த வருடத்தில் 2,359 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை  198 பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 50 பேருந்துகளும், 148 தனியார் பேருந்துகளும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement