மேல் மாகாணத்தில் 4000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண முதலமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில், ஆங்கிலம், தமிழ், தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆங்கில வழி மூலம் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக மேல்மாகாண பொதுச் செயலாளர் திருமதி தம்மிகா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு தீர்வாக பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளைக் கொண்ட குழுவொன்று ஆசிரியர் பணிக்கு உள்வாங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்றையும் அவர்களின் தகைமையின் அடிப்படையில் ஆசிரியர் பணிக்காக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் 4,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள். மேல் மாகாணத்தில் 4000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண முதலமைச்சு அறிவித்துள்ளது.அந்தவகையில், ஆங்கிலம், தமிழ், தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆங்கில வழி மூலம் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக மேல்மாகாண பொதுச் செயலாளர் திருமதி தம்மிகா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.இதற்கு தீர்வாக பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளைக் கொண்ட குழுவொன்று ஆசிரியர் பணிக்கு உள்வாங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்றையும் அவர்களின் தகைமையின் அடிப்படையில் ஆசிரியர் பணிக்காக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.