• Nov 28 2024

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமை..!

Chithra / Jul 4th 2024, 1:13 pm
image


நாட்டில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பதற்காக இடம்பெற்ற கூட்டத்தின் போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் 5,979 பேரில் இதுவரை 5,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 1,975 மில்லியன் ரூபா ஆகும். 

யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பில் இதுவரை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில்  5,448 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமை. நாட்டில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பதற்காக இடம்பெற்ற கூட்டத்தின் போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவிக்கையில்,பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் 5,979 பேரில் இதுவரை 5,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 1,975 மில்லியன் ரூபா ஆகும். யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பில் இதுவரை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில்  5,448 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement