• May 19 2024

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடன் பெற முடியாத நிலை..! அரசு எடுத்துள்ள நடவடிக்கை samugammedia

Chithra / Sep 12th 2023, 7:40 am
image

Advertisement

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகையில் கடன் தகவல் பணியகத்தில் (Crib) பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடன் தகவல் பணியகத்தின் பொது முகாமையாளர் புஷ்பிகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையர்களின் கடன் முகாமைத்துவ அறிவு மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதே இதற்குக் காரணம் என ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார். 

பலர் தங்களது கடன் மற்றும் குத்தகைத் தவணைகளை முறையாகச் செலுத்திய போதிலும், சில நிதி நிறுவனங்கள் உரிய தகவல்களைப் புதுப்பிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்நிலைமையை சரிசெய்வதற்காக, இலங்கை கடன் தகவல் பணியகம், கடன் முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

எந்தவொரு நபரும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு செல்லாமல் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் http://www.crib.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தனது கடன் தகவல் அறிக்கையை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடன் பெற முடியாத நிலை. அரசு எடுத்துள்ள நடவடிக்கை samugammedia இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகையில் கடன் தகவல் பணியகத்தில் (Crib) பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடன் தகவல் பணியகத்தின் பொது முகாமையாளர் புஷ்பிகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையர்களின் கடன் முகாமைத்துவ அறிவு மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதே இதற்குக் காரணம் என ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார். பலர் தங்களது கடன் மற்றும் குத்தகைத் தவணைகளை முறையாகச் செலுத்திய போதிலும், சில நிதி நிறுவனங்கள் உரிய தகவல்களைப் புதுப்பிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலைமையை சரிசெய்வதற்காக, இலங்கை கடன் தகவல் பணியகம், கடன் முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எந்தவொரு நபரும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு செல்லாமல் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் http://www.crib.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தனது கடன் தகவல் அறிக்கையை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement