இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 736 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து 20 ஆயிரத்து 101 பேரும், இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்து 564 பேரும், சீனாவில் இருந்து 10 ஆயிரத்து 696 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
18 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை.samugammedia இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 736 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.ரஷ்யாவில் இருந்து 20 ஆயிரத்து 101 பேரும், இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்து 564 பேரும், சீனாவில் இருந்து 10 ஆயிரத்து 696 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.