• Nov 25 2024

வறிய மக்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான தொகை! ஜனாதிபதி அறிவிப்பு

Chithra / May 9th 2024, 2:14 pm
image


கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல்  நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அமர்வில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

IMF இன் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அரசாங்க சோதனை அறிக்கையின் அடிப்படையில் ஊழலுக்கு எதிரான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

பொருளாதார மறுமலர்ச்சி வேலைத் திட்டத்தின் பெறுபேறுகள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அஸ்வெசும திட்டம் மற்றும் நிவாரணத் திட்டங்களின் கீழ் நாட்டின் வறிய மக்களுக்கு பெருமளவிலான பணத்தை நேரடியாக வழங்குவதாகவும், சிறுநீரக நோயாளிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு 2024  ஏப்ரல்  முதல் 50 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் 

சமுர்த்தி நிவாரணத்தை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான தொகை வறிய மக்களுக்கு வழங்கப்படுவதாகவும், 

2024 ஆம் ஆண்டில் இந்த நிவாரணத் திட்டங்களுக்காக 205 பில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும், இதற்கு முன்னர் இந்தளவு பாரிய தொகை வறிய மக்களுக்காக ஒதுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

வறிய மக்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான தொகை ஜனாதிபதி அறிவிப்பு கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல்  நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் அமர்வில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,IMF இன் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அரசாங்க சோதனை அறிக்கையின் அடிப்படையில் ஊழலுக்கு எதிரான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்பொருளாதார மறுமலர்ச்சி வேலைத் திட்டத்தின் பெறுபேறுகள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அஸ்வெசும திட்டம் மற்றும் நிவாரணத் திட்டங்களின் கீழ் நாட்டின் வறிய மக்களுக்கு பெருமளவிலான பணத்தை நேரடியாக வழங்குவதாகவும், சிறுநீரக நோயாளிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு 2024  ஏப்ரல்  முதல் 50 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் சமுர்த்தி நிவாரணத்தை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான தொகை வறிய மக்களுக்கு வழங்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த நிவாரணத் திட்டங்களுக்காக 205 பில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும், இதற்கு முன்னர் இந்தளவு பாரிய தொகை வறிய மக்களுக்காக ஒதுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement