• May 17 2024

உயர்தர மாணவர்களுக்கு மேலதிக நேரம் ஒதுக்கீடு!

Chithra / Jan 22nd 2023, 1:37 pm
image

Advertisement

நாளை (22) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.


உயர்தர மாணவர்களுக்கு மேலதிக நேரம் ஒதுக்கீடு நாளை (22) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement