• Mar 21 2025

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்த தாய்; அடித்தே கொன்ற மகன்

Chithra / Mar 20th 2025, 3:45 pm
image


 கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில்  போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்க மறுத்த தாயை அடித்து கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, சந்தேக நபரான மகன் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறின் போது சந்தேக நபரான மகன் தனது தாயை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகன் போதைப்பொருளுக்கு அடிமையானர் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 46 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்த தாய்; அடித்தே கொன்ற மகன்  கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில்  போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்க மறுத்த தாயை அடித்து கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தன்று, சந்தேக நபரான மகன் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.தகராறின் போது சந்தேக நபரான மகன் தனது தாயை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.மகன் போதைப்பொருளுக்கு அடிமையானர் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.இதனையடுத்து 46 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement