• Nov 24 2024

மகளை கிணற்றில் தள்ளி விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு- பள்ளியில் சேர்க்க முடியாததால் விரக்தி!

Tamil nila / Jun 21st 2024, 9:30 pm
image

26 வயது இளம்பெண் தனது இரு குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க முடியாத விரக்தியில், 5 வயது பெண் குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்று தானும் உயிரை  மாய்த்து கொண்டார்.

மகாராஷ்டிராவில், மாலேகானை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (26). இவருக்கு ஒரு மகன், மகள் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது மகனையும், மகளையும்  பள்ளியில் சேர்க்க பாக்யஸ்ரீ விரும்பினார். ஆனால், அத்தகைய பள்ளி கட்டணம் இவர்களின் குடும்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்துள்ளது. இதன் காரணமாக பாக்யஸ்ரீ அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணியளவில், தனது மகளுடன் மற்றொரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்ற பாக்யஸ்ரீ, அங்கிருந்து தனது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு வீடியோ கால் செய்து, மகள் சமிக்சாவின் முகத்தை கடைசியாக பார்க்குமாறு கூறிவிட்டு, சிறுமியை கிணற்றில் தள்ளி, அவரும் குதித்தார்.

தகவலறிந்த ஆரத் ஷஹாஜானி காவல் நிலைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் பாக்யஸ்ரீ, சமிக்சா ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனர்.

மகளை கிணற்றில் தள்ளி விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு- பள்ளியில் சேர்க்க முடியாததால் விரக்தி 26 வயது இளம்பெண் தனது இரு குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க முடியாத விரக்தியில், 5 வயது பெண் குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்று தானும் உயிரை  மாய்த்து கொண்டார்.மகாராஷ்டிராவில், மாலேகானை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (26). இவருக்கு ஒரு மகன், மகள் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் தனது மகனையும், மகளையும்  பள்ளியில் சேர்க்க பாக்யஸ்ரீ விரும்பினார். ஆனால், அத்தகைய பள்ளி கட்டணம் இவர்களின் குடும்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்துள்ளது. இதன் காரணமாக பாக்யஸ்ரீ அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணியளவில், தனது மகளுடன் மற்றொரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்ற பாக்யஸ்ரீ, அங்கிருந்து தனது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு வீடியோ கால் செய்து, மகள் சமிக்சாவின் முகத்தை கடைசியாக பார்க்குமாறு கூறிவிட்டு, சிறுமியை கிணற்றில் தள்ளி, அவரும் குதித்தார்.தகவலறிந்த ஆரத் ஷஹாஜானி காவல் நிலைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் பாக்யஸ்ரீ, சமிக்சா ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement