• Dec 28 2024

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - யாழ். இளைஞன் பரிதாப மரணம்

Chithra / Dec 26th 2024, 12:17 pm
image

  

வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார், மற்றையவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே மரணமடைந்தார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - யாழ். இளைஞன் பரிதாப மரணம்   வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார், மற்றையவர் காயமடைந்துள்ளார்.சம்பவத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே மரணமடைந்தார்.விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement