• Sep 19 2024

மலையக மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாத எம்.பிகள்..! அமைச்சர் ஜீவன் ஆதங்கம்..!samugammedia

Sharmi / Aug 14th 2023, 11:39 am
image

Advertisement

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்கள் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள் மட்டுமல்லாது, எமது மக்களின் அபிலாஷைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பரிணாமங்களுடன் விஸ்தரித்து பல இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளை வழங்கி நாட்டின் கொள்கை தீர்மானத்தில் சந்தர்ப்பத்தையும் வழங்கி வருகிறோம்.

ஜனாதிபதி அவர்களுடன் மலையக மக்களின் அபிவிருத்திக்கான சந்திப்பு இடம்பெற்றது. ஆனால், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரதிநிதிகள் அதில் பங்குகொள்ளாது தவிர்த்தனர்.

எமது மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக எமது மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள் மட்டுமல்லாது, எமது மக்களின் அபிலாஷைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள்.

அதேவேளை இன அடையாளம் எமது உரிமை. சிலர் இதனை இனவாதமாக மாற்றுவதாலேயே எமது நாடு இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. இளம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் இதனை மாற்றி அமைப்போம். என்றும் நாங்கள் உங்களுடன் என்றார்.

மலையக மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாத எம்.பிகள். அமைச்சர் ஜீவன் ஆதங்கம்.samugammedia எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்கள் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள் மட்டுமல்லாது, எமது மக்களின் அபிலாஷைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பரிணாமங்களுடன் விஸ்தரித்து பல இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளை வழங்கி நாட்டின் கொள்கை தீர்மானத்தில் சந்தர்ப்பத்தையும் வழங்கி வருகிறோம். ஜனாதிபதி அவர்களுடன் மலையக மக்களின் அபிவிருத்திக்கான சந்திப்பு இடம்பெற்றது. ஆனால், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரதிநிதிகள் அதில் பங்குகொள்ளாது தவிர்த்தனர்.எமது மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக எமது மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள் மட்டுமல்லாது, எமது மக்களின் அபிலாஷைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள்.அதேவேளை இன அடையாளம் எமது உரிமை. சிலர் இதனை இனவாதமாக மாற்றுவதாலேயே எமது நாடு இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. இளம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் இதனை மாற்றி அமைப்போம். என்றும் நாங்கள் உங்களுடன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement