• Jun 17 2024

அடிப்படை அறிவற்ற எம்.பிக்களே 13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி - ஹரின் விளாசல்! samugammedia

Tamil nila / Aug 17th 2023, 6:50 am
image

Advertisement

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது. அதை முழுமையாக அமுல்படுத்தியே தீர வேண்டும். அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர்."

- இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க படிப்படியாக நிறைவேற்றி வருகின்றார். அதேபோல் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

இந்நிலையில், 13 தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து முட்டிமோதுவதை ஆளும் - எதிரணி எம்.பிக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்." - என்றார்.

அடிப்படை அறிவற்ற எம்.பிக்களே 13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி - ஹரின் விளாசல் samugammedia "அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது. அதை முழுமையாக அமுல்படுத்தியே தீர வேண்டும். அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர்."- இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க படிப்படியாக நிறைவேற்றி வருகின்றார். அதேபோல் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.இந்நிலையில், 13 தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து முட்டிமோதுவதை ஆளும் - எதிரணி எம்.பிக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement