• Jul 19 2025

மூதூர் - திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

Thansita / Jul 19th 2025, 11:31 am
image

மூதூர் - திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை (23) காலை 10.00 மணியளவில் ஆதிசிவப்பெருமான் அம்பாள் சமேதராக ஆலயத்தில் இருந்து எழுந்தருளி புனித மகாவலி கங்கைக்கரையை சென்றடைவார்.

அன்றைய தினம் இரவு தீர்த்தக் கரையிலே அகத்திய ஸ்தாபன வரலாற்றைக் கூறும் திருக்கரைசைப் புராணம் படித்துப் பயன் சொல்லுகின்ற நிகழ்வும், சைவ சமய கலை கலாச்சாரத்திற்கு அமைவான நிகழ்வுகளும் இடம்பெற்று

மறுநாள் வியாழக்கிழமை (23) அன்று காலை புனித தீ மிதிப்பு வைபவமும் திருப்பொற்சுண்ணம் இடிக்கின்ற நிகழ்வும் தொன்மையும் அருளும் நிறைந்த ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

மூதூர் - திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் மூதூர் - திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது.எதிர்வரும் புதன்கிழமை (23) காலை 10.00 மணியளவில் ஆதிசிவப்பெருமான் அம்பாள் சமேதராக ஆலயத்தில் இருந்து எழுந்தருளி புனித மகாவலி கங்கைக்கரையை சென்றடைவார். அன்றைய தினம் இரவு தீர்த்தக் கரையிலே அகத்திய ஸ்தாபன வரலாற்றைக் கூறும் திருக்கரைசைப் புராணம் படித்துப் பயன் சொல்லுகின்ற நிகழ்வும், சைவ சமய கலை கலாச்சாரத்திற்கு அமைவான நிகழ்வுகளும் இடம்பெற்று மறுநாள் வியாழக்கிழமை (23) அன்று காலை புனித தீ மிதிப்பு வைபவமும் திருப்பொற்சுண்ணம் இடிக்கின்ற நிகழ்வும் தொன்மையும் அருளும் நிறைந்த ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

Advertisement

Advertisement

Advertisement