• May 17 2024

முல்லை நீதிபதி விவகாரம்; ஒன்றுசேர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள்...! நீதி கோரி யாழில் நாளை மாபெரும் மக்கள் எழுச்சி...!samugammedia

Sharmi / Oct 3rd 2023, 9:53 pm
image

Advertisement

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளைய தினம்(4) மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் நாளை(04) காலை 9 மணியளவில் ஆரம்பமாகி யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ் வணிகர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

அதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இன்று மாலை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழின் முக்கிய பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை, மாநகர சபை உறுப்பினர்கள் என  அனைவரும் ஒன்றுசேர்ந்து  துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்திற்கான ஆதரவை திரட்டியமை குறிப்பிடத்தக்கது.


முல்லை நீதிபதி விவகாரம்; ஒன்றுசேர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள். நீதி கோரி யாழில் நாளை மாபெரும் மக்கள் எழுச்சி.samugammedia முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளைய தினம்(4) மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் நாளை(04) காலை 9 மணியளவில் ஆரம்பமாகி யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ் வணிகர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.அதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இன்று மாலை அறிவித்துள்ளது.இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழின் முக்கிய பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.குறிப்பாக தமிழ் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை, மாநகர சபை உறுப்பினர்கள் என  அனைவரும் ஒன்றுசேர்ந்து  துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்திற்கான ஆதரவை திரட்டியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement