• May 19 2024

கூட்டமைப்பின் அறிவிப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்பு!

Chithra / Dec 5th 2022, 8:24 am
image

Advertisement

"மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாகப்  பேச்சுக்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளமையை வரவேற்கின்றோம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுக்குச் செல்வதற்கு முன்பாக, மலையகக் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுக்களை முன்னெடுப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.

இந்நிலையில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

"மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்தமையை நாம் வரவேற்கின்றோம்.

இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது.

எனினும், அதற்கான அழைப்பு எமக்கும் இன்னும் விடுக்கப்படவில்லை" - என்று நிசாம் காரியப்பர் கூறினார்.

கூட்டமைப்பின் அறிவிப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்பு "மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாகப்  பேச்சுக்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளமையை வரவேற்கின்றோம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுக்குச் செல்வதற்கு முன்பாக, மலையகக் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுக்களை முன்னெடுப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.இந்நிலையில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்."மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்தமையை நாம் வரவேற்கின்றோம்.இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது.எனினும், அதற்கான அழைப்பு எமக்கும் இன்னும் விடுக்கப்படவில்லை" - என்று நிசாம் காரியப்பர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement