• May 19 2024

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான தடைகளையும் உடைத்தெறிந்து நிறைவேற்றுவதே எனது அணுகு முறை - டக்ளஸ்! samugammedia

Tamil nila / Nov 24th 2023, 8:38 pm
image

Advertisement

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அவற்றை நிறைவேற்றுவதே என்னுடைய அணுகு முறை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்று (24.11.2023) விஜயம் செய்த டக்ளஸ் தேவானந்தா, பாடசாலை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

“மகாஜனாக் கல்லூரியின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்ற இரண்டு ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை இரத்து செய்து தருமாறு என்னை வந்து சந்தித்த பாடசாலை சமூகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எப்போதும் பெரும்பான்மை கருத்துக்களில் நியாயம் இருப்பின் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாடு என்னிடம் உள்ளது.

பாடசாலை சமூகத்தினரின் பூரண ஆதரவு இருக்குமாயின் அதற்கு எனது ஒத்துழைப்பும் இருக்கும் என்பதை கூறியிருந்தேன். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றேன்.

இந்தளவிற்கு பெருந்தொகையானோர் திரண்டு வந்து உங்களின் ஆதரவை வெளிப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

உங்களின் எதிர்பார்ப்புக்களான இரண்டு சிரேஸ்ட ஆசிரியர்களும் இந்தப் பாடசாலையில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பினை நான் வழங்குவேன்.

இந்தப் பிரச்சினையை மாகாண மட்டத்தில் தீர்க்க முடியும் என்று நம்புகின்றேன். முடியாவிட்டால், மத்திக்கு எடுத்துச் சென்றாவது சாதகமான முடிவை பெற்றுத்தருவதற்கு தயங்க மாட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அவற்றை நிறைவேற்றுவதே என்னுடைய அணுகு முறையாக இருக்கின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இ்ந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், யாழ் மத்திய கல்லூரி, வேம்படி மகளீர் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் நிர்வாகத்தினுள் மூக்கை நுழைத்து நான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக அநாமதேய சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டன.

இவ்வாறான வசைபாடல்கள் மற்றும் சேறடிப்புக்கள் தொடர்பாக நான் கருத்தில்  கொள்வதில்லை. எனினும், பாடசாலை சமூகங்களினால் அழைப்பு விடுக்கப்படுகின்ற நிலையிலேயே, என்னுடைய தலையீட்டினால் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றேன்.

இதே போன்று பத்து வருடங்களுக்கு முன்னர் உடுவில் மகளீர் கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பிலும் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்திருந்தேன். இவ்வாறு பல உதாரணங்களை சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.



மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான தடைகளையும் உடைத்தெறிந்து நிறைவேற்றுவதே எனது அணுகு முறை - டக்ளஸ் samugammedia மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அவற்றை நிறைவேற்றுவதே என்னுடைய அணுகு முறை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்று (24.11.2023) விஜயம் செய்த டக்ளஸ் தேவானந்தா, பாடசாலை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,“மகாஜனாக் கல்லூரியின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்ற இரண்டு ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை இரத்து செய்து தருமாறு என்னை வந்து சந்தித்த பாடசாலை சமூகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.எப்போதும் பெரும்பான்மை கருத்துக்களில் நியாயம் இருப்பின் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாடு என்னிடம் உள்ளது.பாடசாலை சமூகத்தினரின் பூரண ஆதரவு இருக்குமாயின் அதற்கு எனது ஒத்துழைப்பும் இருக்கும் என்பதை கூறியிருந்தேன். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றேன்.இந்தளவிற்கு பெருந்தொகையானோர் திரண்டு வந்து உங்களின் ஆதரவை வெளிப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.உங்களின் எதிர்பார்ப்புக்களான இரண்டு சிரேஸ்ட ஆசிரியர்களும் இந்தப் பாடசாலையில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பினை நான் வழங்குவேன்.இந்தப் பிரச்சினையை மாகாண மட்டத்தில் தீர்க்க முடியும் என்று நம்புகின்றேன். முடியாவிட்டால், மத்திக்கு எடுத்துச் சென்றாவது சாதகமான முடிவை பெற்றுத்தருவதற்கு தயங்க மாட்டேன்.என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அவற்றை நிறைவேற்றுவதே என்னுடைய அணுகு முறையாக இருக்கின்றது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இ்ந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், யாழ் மத்திய கல்லூரி, வேம்படி மகளீர் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் நிர்வாகத்தினுள் மூக்கை நுழைத்து நான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக அநாமதேய சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டன.இவ்வாறான வசைபாடல்கள் மற்றும் சேறடிப்புக்கள் தொடர்பாக நான் கருத்தில்  கொள்வதில்லை. எனினும், பாடசாலை சமூகங்களினால் அழைப்பு விடுக்கப்படுகின்ற நிலையிலேயே, என்னுடைய தலையீட்டினால் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றேன்.இதே போன்று பத்து வருடங்களுக்கு முன்னர் உடுவில் மகளீர் கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பிலும் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்திருந்தேன். இவ்வாறு பல உதாரணங்களை சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement