• Nov 26 2024

நடுக்கடலில் நோய்வாய் பட்ட இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள்..!

Sharmi / Aug 2nd 2024, 11:08 am
image

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கி நிலையில் இருந்த இலங்கை மீனவரை நாகை சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த கடற்றொழிலாளருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு நேர் கிழக்கே 350 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையை சேர்ந்த ஒரு பைபர் படகில் மீனவர் ஒருவர் மயங்கி நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரை படகுடன் பத்திரமாக மீட்டு இன்று காலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் சிகிச்சைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்திய விசாரணையில்,  பாதிக்கப்பட்ட மீனவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்த இப்ரால் லெப்பை மகன் அகமது இர்ஃபான் மற்றும் அதே ஊரை சேர்ந்த அகஸ்டின் என்பவரும் கடந்த 20 நாளைக்கு முன்பு திருகோணமலையிலிருந்து மீன்பிடிக்க சென்றதுடன் அப்போது அகமது இர்ஃபானுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தத்தளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நடுக்கடலில் நோய்வாய் பட்ட இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள். நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கி நிலையில் இருந்த இலங்கை மீனவரை நாகை சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த கடற்றொழிலாளருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு நேர் கிழக்கே 350 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையை சேர்ந்த ஒரு பைபர் படகில் மீனவர் ஒருவர் மயங்கி நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரை படகுடன் பத்திரமாக மீட்டு இன்று காலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் சிகிச்சைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்திய விசாரணையில்,  பாதிக்கப்பட்ட மீனவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்த இப்ரால் லெப்பை மகன் அகமது இர்ஃபான் மற்றும் அதே ஊரை சேர்ந்த அகஸ்டின் என்பவரும் கடந்த 20 நாளைக்கு முன்பு திருகோணமலையிலிருந்து மீன்பிடிக்க சென்றதுடன் அப்போது அகமது இர்ஃபானுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தத்தளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement