• Feb 02 2025

மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல்..!

Sharmi / Feb 1st 2025, 10:02 pm
image

மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு நாமல் ராஜபக்ச நேரில் சென்று இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை.சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம்(01)மாலை அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச  அவரது புகழுடலுக்கு மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் நினைவு பகிர்ந்தனர். 

இதன்போது பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கமும் மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதேநேரம் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்குகள் நாளையதினம், மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல். மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு நாமல் ராஜபக்ச நேரில் சென்று இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை.சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்றையதினம்(01)மாலை அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச  அவரது புகழுடலுக்கு மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் நினைவு பகிர்ந்தனர். இதன்போது பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கமும் மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.இதேநேரம் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்குகள் நாளையதினம், மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement