இந்தியாவின் தேசிய திரைப்பட விழாவில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954 ஆம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகர்,நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் உள்ளிட்ட பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நேற்று மாலை 4 மணிக்கு புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரம்மாண்டமாக இடம்பெற்றது.
இதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை நாள் 2 திரைப்படத்தில் நடித்த 4 வயது சிறுமியான ரீசா விவேக் தோஷார் பெற்றுக் கொண்டார்.
அரங்கம் நிறைந்த கைதட்டல்களுடன் விருதைப் பெறுவதற்காக சிறுமி அழகாக மேடையேறியுள்ளார்.
அழகாக இருகரம் கூப்பி அரங்கத்தில் உள்ளோருக்கும் மேடையிலிருந்த ஜனாதிபதி திரௌபதி முர்பு உள்ளிட்டோருக்கும் வணக்கம் தெரிவித்து தனது விருதை ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவும் 4 வயதில் விருதைப் பெற்ற சிறுமிக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்து விருது வழங்கிக் கௌரவித்தார்.
தனது 4 வயதில் அவர் தேசிய விருதைப் பெற்றுக்கொள்ளும் அழகிய காட்சியைப் பெற்றோர் உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன் பெருமையடைந்தனர்.
தேசிய விருது பெறுவதற்காக அரங்கில் அமர்ந்திருந்த முன்னணி நடிகர்,நடிகை, இசையமைப்பாளர் உள்ளிட்ட பலரும் சிறுமிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதேவேளை தேசிய திரைப்பட விருது விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருதை விக்ராந்த் மசாய் வென்றார். 'ஜவான்' படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்.
இது தவிர சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜீவிப்பிரகாஷ், சிறந்த துணைநடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர், சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை ஊர்வசியும் பெற்றுக்கொண்டனர்.
நான்கு வயதில் தேசிய விருது; அரங்கம் அதிர மேடையேறிய சிறுமி - குவியும் பாராட்டுக்கள் இந்தியாவின் தேசிய திரைப்பட விழாவில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றுள்ளார்.இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954 ஆம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகர்,நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் உள்ளிட்ட பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நேற்று மாலை 4 மணிக்கு புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரம்மாண்டமாக இடம்பெற்றது.இதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை நாள் 2 திரைப்படத்தில் நடித்த 4 வயது சிறுமியான ரீசா விவேக் தோஷார் பெற்றுக் கொண்டார். அரங்கம் நிறைந்த கைதட்டல்களுடன் விருதைப் பெறுவதற்காக சிறுமி அழகாக மேடையேறியுள்ளார். அழகாக இருகரம் கூப்பி அரங்கத்தில் உள்ளோருக்கும் மேடையிலிருந்த ஜனாதிபதி திரௌபதி முர்பு உள்ளிட்டோருக்கும் வணக்கம் தெரிவித்து தனது விருதை ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி திரௌபதி முர்முவும் 4 வயதில் விருதைப் பெற்ற சிறுமிக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்து விருது வழங்கிக் கௌரவித்தார். தனது 4 வயதில் அவர் தேசிய விருதைப் பெற்றுக்கொள்ளும் அழகிய காட்சியைப் பெற்றோர் உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன் பெருமையடைந்தனர். தேசிய விருது பெறுவதற்காக அரங்கில் அமர்ந்திருந்த முன்னணி நடிகர்,நடிகை, இசையமைப்பாளர் உள்ளிட்ட பலரும் சிறுமிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதேவேளை தேசிய திரைப்பட விருது விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை விக்ராந்த் மசாய் வென்றார். 'ஜவான்' படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்.இது தவிர சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜீவிப்பிரகாஷ், சிறந்த துணைநடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர், சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை ஊர்வசியும் பெற்றுக்கொண்டனர்.