• May 20 2024

ஜனாதிபதியின் 13வது திட்டத்தை முறியடிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி சபதம்!

Chithra / Feb 1st 2023, 11:30 am
image

Advertisement

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

ஒற்றையாட்சி அந்தஸ்தை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இதேவேளை 13வது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிடுமாறு, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய சுதந்திர முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, பிவுத்துரு ஹெல உறுமய, நிதாஹஸ் ஜனதா பெரமுன ஆகிய கட்சிகள் தமது நிலைப்பாட்டை இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் 13வது திட்டத்தை முறியடிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி சபதம் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.ஒற்றையாட்சி அந்தஸ்தை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.இதேவேளை 13வது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிடுமாறு, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய சுதந்திர முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, பிவுத்துரு ஹெல உறுமய, நிதாஹஸ் ஜனதா பெரமுன ஆகிய கட்சிகள் தமது நிலைப்பாட்டை இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement