• Nov 16 2024

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்; வடக்கில் வாழும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வழங்குமாறு கோரிக்கை..!

Sharmi / Nov 16th 2024, 3:49 pm
image

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்திடம் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜ்  முன்வைத்துள்ளதுடன், அதன் பிரதிகள் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

எம்.பி.நடராஜ் ஆகிய நான் இலங்கை தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் பெற்ற உறுப்பினர். 1995 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியுடன் இணைந்து பயணித்துள்ளேன்.

2013 ஆம் ஆண்டு வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு 10,800 வாக்குகளைப் பெற்றதுடன் சுழற்சி முறை உறுப்பினராகவும் பதவி வகித்தேன்.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் மூன்று முறிப்பு வட்டாரத்தில் போட்டியிட்டேன். ஆனால் தேர்தல் நடைபெறவில்லை.

கடந்த காலங்களில் வடக்கு மலையக மக்கள் சார்பாக ஒத்துழைப்புடனும், விட்டுக் கொடுப்புக்களுடனும் செயற்பட்டேன்.

இந்நிலையில் வடக்கு பகுதியில் வாழும் 2 லட்சம் மலையக மக்கள் சார்பாக  தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை தனக்கு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

மேலும், தேசியப் பட்டியலில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்; வடக்கில் வாழும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வழங்குமாறு கோரிக்கை. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்திடம் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜ்  முன்வைத்துள்ளதுடன், அதன் பிரதிகள் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த கடிதத்தில், எம்.பி.நடராஜ் ஆகிய நான் இலங்கை தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் பெற்ற உறுப்பினர். 1995 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியுடன் இணைந்து பயணித்துள்ளேன். 2013 ஆம் ஆண்டு வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு 10,800 வாக்குகளைப் பெற்றதுடன் சுழற்சி முறை உறுப்பினராகவும் பதவி வகித்தேன். 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் மூன்று முறிப்பு வட்டாரத்தில் போட்டியிட்டேன். ஆனால் தேர்தல் நடைபெறவில்லை.கடந்த காலங்களில் வடக்கு மலையக மக்கள் சார்பாக ஒத்துழைப்புடனும், விட்டுக் கொடுப்புக்களுடனும் செயற்பட்டேன். இந்நிலையில் வடக்கு பகுதியில் வாழும் 2 லட்சம் மலையக மக்கள் சார்பாக  தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை தனக்கு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.மேலும், தேசியப் பட்டியலில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement