• Nov 28 2024

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி- சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவோம் என அனுர சூளுரை...!

Sharmi / Aug 29th 2024, 9:09 am
image

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது எனவும் இதனால் என்னோடு போட்டியிடுகின்ற சக ஜனாதிபதி வேட்பாளர்கள் குழப்பமடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மூதூரில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தென் மாகாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவானது அதிகரித்துள்ளது.

கருத்துக் கணிப்பிலும் எமது கட்சியே முன்னிலையில் உள்ளது.

நாம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.நாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கு, தென் மாகாணம் என்று பாராமல் சகலருக்கும் பொதுவான சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவோம் என தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இனவாதம் பேசியவர்கள் சஜித் அணியிலும், ரணில் அணியிலும் காணப்படுகின்றனர்.எமது அணியில் அப்படி யாரும் இல்லை.நாம் பேசாததை பிரச்சார மேடைகளில் பேசி எம்மை மக்களிடமிருந்து பிரிக்கப் பார்க்கின்றனர்.அது ஒரு போதும் மக்களிடத்தில் எடுபடாது.மக்களுக்கு தெரியும்.

நாம் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள்,வியாபாரிகள்,மீனவர்கள் என சகலருக்கும் விமோசனத்தை பெற்றுக் கொடுப்போம்.

திருடர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்து இந்த நாட்டை அபிவிருத்தியின் கொண்டு சென்று சகல இன மக்களுக்குமான சிறந்த தேசத்தை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவித்தார். 


ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி- சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவோம் என அனுர சூளுரை. தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது எனவும் இதனால் என்னோடு போட்டியிடுகின்ற சக ஜனாதிபதி வேட்பாளர்கள் குழப்பமடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.மூதூரில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தென் மாகாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவானது அதிகரித்துள்ளது.கருத்துக் கணிப்பிலும் எமது கட்சியே முன்னிலையில் உள்ளது.நாம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.நாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கு, தென் மாகாணம் என்று பாராமல் சகலருக்கும் பொதுவான சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவோம் என தெரிவித்தார்.கடந்த காலங்களில் இனவாதம் பேசியவர்கள் சஜித் அணியிலும், ரணில் அணியிலும் காணப்படுகின்றனர்.எமது அணியில் அப்படி யாரும் இல்லை.நாம் பேசாததை பிரச்சார மேடைகளில் பேசி எம்மை மக்களிடமிருந்து பிரிக்கப் பார்க்கின்றனர்.அது ஒரு போதும் மக்களிடத்தில் எடுபடாது.மக்களுக்கு தெரியும்.நாம் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள்,வியாபாரிகள்,மீனவர்கள் என சகலருக்கும் விமோசனத்தை பெற்றுக் கொடுப்போம்.திருடர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்து இந்த நாட்டை அபிவிருத்தியின் கொண்டு சென்று சகல இன மக்களுக்குமான சிறந்த தேசத்தை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement