• Mar 11 2025

தாய், தந்தையற்ற பிள்ளைகள் போன்றுள்ள தேசிய பாடசாலைகள்; நடவடிக்கை என்ன? - ரோஹித கேள்வி

Chithra / Mar 11th 2025, 8:01 am
image


 

கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட மாகாண பாடசாலைகள் தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் போன்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்தப் பாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ளதா அல்லது மாகாண சபையின் கீழ் உள்ளதா என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கல்வி மறுசீரமைப்பின்போது கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் 9ஆம் தரத்துக்காக புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்தப்போவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். 

அவ்வாறு அந்த வகுப்புக்கு புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்துவதென்றால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? அது நீக்கப்படுமா, அதேபோன்று சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள் என்பதனையும் கூறுங்கள். அது நல்ல விடயமென்றால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபைகளின் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தில் இருந்தாலும் அந்த தீர்மானம் தொடர்பில் நான் திருப்தியாக இருக்கவில்லை. 

அந்த பாடசாலையின் பெயர் பலகைக்கு 10 இலட்சம் ரூபாவும் இணையத்தளத்துக்கு 10 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. 

ஆனால், ஆசிரியர்களும் பிள்ளைகளும் தேசிய பாடசாலை என்ற மகிழ்ச்சியில் இருந்ததுடன், இப்போதும் தேசிய பாடசாலை என்றே கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் போகின்றன. ஆனால், அவ்வாறு பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இந்த பெயர் நீக்கப்பட்டது. இப்போது அந்தப் பாடசாலைகள் தாய், தந்தை இல்லாத பாடசாலைகள் போன்று ஆகிவிட்டது. இப்போது யார் இதற்கு பொறுப்பு என்று தெரியாமல் இருக்கிறது. 

இதனால் இந்த பாடசாலைகள் தொடர்பில் சரியான முறைமையொன்றை தயாரிக்குமாறு கோருகின்றோம் என்றார்.

தாய், தந்தையற்ற பிள்ளைகள் போன்றுள்ள தேசிய பாடசாலைகள்; நடவடிக்கை என்ன - ரோஹித கேள்வி  கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட மாகாண பாடசாலைகள் தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் போன்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்தப் பாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ளதா அல்லது மாகாண சபையின் கீழ் உள்ளதா என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேள்வியெழுப்பினார்.பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கல்வி மறுசீரமைப்பின்போது கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் 9ஆம் தரத்துக்காக புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்தப்போவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். அவ்வாறு அந்த வகுப்புக்கு புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்துவதென்றால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் அது நீக்கப்படுமா, அதேபோன்று சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள் என்பதனையும் கூறுங்கள். அது நல்ல விடயமென்றால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.இதேவேளை கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபைகளின் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தில் இருந்தாலும் அந்த தீர்மானம் தொடர்பில் நான் திருப்தியாக இருக்கவில்லை. அந்த பாடசாலையின் பெயர் பலகைக்கு 10 இலட்சம் ரூபாவும் இணையத்தளத்துக்கு 10 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. ஆனால், ஆசிரியர்களும் பிள்ளைகளும் தேசிய பாடசாலை என்ற மகிழ்ச்சியில் இருந்ததுடன், இப்போதும் தேசிய பாடசாலை என்றே கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் போகின்றன. ஆனால், அவ்வாறு பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறு இந்த பெயர் நீக்கப்பட்டது. இப்போது அந்தப் பாடசாலைகள் தாய், தந்தை இல்லாத பாடசாலைகள் போன்று ஆகிவிட்டது. இப்போது யார் இதற்கு பொறுப்பு என்று தெரியாமல் இருக்கிறது. இதனால் இந்த பாடசாலைகள் தொடர்பில் சரியான முறைமையொன்றை தயாரிக்குமாறு கோருகின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement