• May 19 2024

புத்தரின் பிறப்பிடம் லும்பினியை தன்னுடன் இணைத்த இந்தியா- நேபாளம் கண்டனம்..! samugammedia

Tamil nila / Jun 3rd 2023, 6:15 pm
image

Advertisement

புதிய பாராளுமன்றத்தில் வரையப்பட்ட  சுவர் ஓவியத்திற்கு நேபாள நாட்டினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த நிலையில் அதில் பல சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 

அந்த ஓவியத்தில் நேபாளத்திலுள்ள புத்தரின் பிறப்பிடமான லும்பினி என்ற பகுதி இந்தியாவில் இருப்பது போன்று உள்ளது. 

அந்த வகையில், புத்தரின் பிறப்பிடம் லும்பினி என்பது நேபாள நாட்டின் கலாச்சார அடையாளமாக அது திகழ்கின்றது என்றும் அதனை அகண்ட பாரத வரைபடத்தில் இணைத்து இந்தியா எல்லை மீறியுள்ளதாக நேபாள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

 இந்தியாவிற்கு  பெரும்பாலான அயல்  நாடுகளுடன் உறவில் சிக்கல் நிலவி வரும் நிலையில் இந்த சுவர் ஓவியத்தால் நேபாளத்துடனும் உறவில் விரிசல் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. 

மேலும், அசாம் மாநிலத்தின் சில பகுதிகளை சீனா தனது வரைபடத்தில்  இணைத்த பொழுது  இந்தியா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. 

ஆனால் தற்போது இந்தியாவே அகண்ட பாரதம் என்ற பெயரில் நேபாள நாட்டை இணைத்தமையால் அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக நேபாள அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.


புத்தரின் பிறப்பிடம் லும்பினியை தன்னுடன் இணைத்த இந்தியா- நேபாளம் கண்டனம். samugammedia புதிய பாராளுமன்றத்தில் வரையப்பட்ட  சுவர் ஓவியத்திற்கு நேபாள நாட்டினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த நிலையில் அதில் பல சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த ஓவியத்தில் நேபாளத்திலுள்ள புத்தரின் பிறப்பிடமான லும்பினி என்ற பகுதி இந்தியாவில் இருப்பது போன்று உள்ளது. அந்த வகையில், புத்தரின் பிறப்பிடம் லும்பினி என்பது நேபாள நாட்டின் கலாச்சார அடையாளமாக அது திகழ்கின்றது என்றும் அதனை அகண்ட பாரத வரைபடத்தில் இணைத்து இந்தியா எல்லை மீறியுள்ளதாக நேபாள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியாவிற்கு  பெரும்பாலான அயல்  நாடுகளுடன் உறவில் சிக்கல் நிலவி வரும் நிலையில் இந்த சுவர் ஓவியத்தால் நேபாளத்துடனும் உறவில் விரிசல் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. மேலும், அசாம் மாநிலத்தின் சில பகுதிகளை சீனா தனது வரைபடத்தில்  இணைத்த பொழுது  இந்தியா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவே அகண்ட பாரதம் என்ற பெயரில் நேபாள நாட்டை இணைத்தமையால் அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக நேபாள அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement