• Sep 22 2024

தாளையடி நன்னீர் திட்டத்தின் கடல் பாதுகாப்பு கம்பங்களில் சிக்குண்டு பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்! samugammedia

Tamil nila / Dec 8th 2023, 6:38 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காட்டை சேர்ந்த மீனவர் ஒருவரின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் தாளையடி நன்னீர் தடுப்பு கம்பங்களில் சிக்குண்டு கிழிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடற்றொழிலுக்காக நேற்றையதினம்  கடலுக்கு சென்ற கட்டைக்காடு  மீனவர் ஒருவரின்  வலைகள் நீரோட்டத்துடன் தாளையடி பகுதியில் ஆள்கடலில் உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தின்  பாதுகாப்பு தடுப்பு கம்பம் மற்றும் மிதப்புகளில் சிக்குண்டு பல இலட்சம் பெறுமதியான வலைகள் அறுந்தும் கிழிந்தும் நாசமாகியுள்ளன.


குறித்த கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பலரது படகுகள், பலரது வலைகள் என்பன இவ்வாறு நாசமாகியுள்ளன.

இதேவேளை குறித்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வருடங்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு மீனவர் சமூகமும் ஒட்டுமொத்தமாக திரண்டு ஏதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் பாதிக்கப்பட்ட மீனவரும் அடுத்த வேளை பிழைப்பிற்காக ஏங்கும் ஒரு வறிய மீனவர் ஆவார்.


தாளையடி நன்னீர் திட்டத்தின் கடல் பாதுகாப்பு கம்பங்களில் சிக்குண்டு பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காட்டை சேர்ந்த மீனவர் ஒருவரின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் தாளையடி நன்னீர் தடுப்பு கம்பங்களில் சிக்குண்டு கிழிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,கடற்றொழிலுக்காக நேற்றையதினம்  கடலுக்கு சென்ற கட்டைக்காடு  மீனவர் ஒருவரின்  வலைகள் நீரோட்டத்துடன் தாளையடி பகுதியில் ஆள்கடலில் உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தின்  பாதுகாப்பு தடுப்பு கம்பம் மற்றும் மிதப்புகளில் சிக்குண்டு பல இலட்சம் பெறுமதியான வலைகள் அறுந்தும் கிழிந்தும் நாசமாகியுள்ளன.குறித்த கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பலரது படகுகள், பலரது வலைகள் என்பன இவ்வாறு நாசமாகியுள்ளன.இதேவேளை குறித்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வருடங்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு மீனவர் சமூகமும் ஒட்டுமொத்தமாக திரண்டு ஏதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.நேற்றையதினம் பாதிக்கப்பட்ட மீனவரும் அடுத்த வேளை பிழைப்பிற்காக ஏங்கும் ஒரு வறிய மீனவர் ஆவார்.

Advertisement

Advertisement

Advertisement