• Nov 26 2024

பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய சட்டமூலம்..! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

Chithra / Jan 29th 2024, 2:54 pm
image

 

பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் வியாபார நிலையம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பத்து மணிக்குப் பிறகும் பெண்களை வேலைக்கு அமர்த்தலாம்.

இவ்வாறு பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, ஓய்வெடுக்கும் வசதி உள்ளிட்ட நலன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும் என திருத்தப்பட்ட சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

பதினெட்டு வயது நிரம்பிய பெண்களை மட்டுமே இவ்வாறு பணியில் அமர்த்த முடியும். 

இந்த திருத்தம் தொடர்பான சட்டமூலம் தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய சட்டமூலம். அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு  பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் வியாபார நிலையம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பத்து மணிக்குப் பிறகும் பெண்களை வேலைக்கு அமர்த்தலாம்.இவ்வாறு பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, ஓய்வெடுக்கும் வசதி உள்ளிட்ட நலன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும் என திருத்தப்பட்ட சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.பதினெட்டு வயது நிரம்பிய பெண்களை மட்டுமே இவ்வாறு பணியில் அமர்த்த முடியும். இந்த திருத்தம் தொடர்பான சட்டமூலம் தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement