• Nov 26 2024

பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள்- ஜனாதிபதி உறுதி..!

Sharmi / Aug 13th 2024, 9:42 pm
image

இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுமு; போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்புக்காக தற்போதுள்ள அனைத்து பொலிஸ், இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்களை ஒன்றிணைத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தனியொரு நிறுவனமாக உருவாக்கி, அதற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும்.

பாதாள உலகக் குழுகளுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ அனுமதிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த மாதத்தில், உங்களுக்கு இன்னொரு பாரிய பணியொன்று உள்ளது. ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, இத்தேர்தலை சட்டரீதியாக நடத்த வாய்ப்பளிப்பது பொலிஸ் திணைக்களத்தின் கடமையாகும்.

ஜனாதிபதி என்ற வகையில் எனதும் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கடமையும் ஆகும்.

அது மாத்திரமன்றி, தேர்தலுக்குப் பின்னரும் வன்முறைச் செயல்கள் நடப்பதற்கு இடமளிக்க முடியாது. நாம் அவற்றை நிறுத்த வேண்டும். 

இந்தத் தேர்தலுக்குப் பிறகு எந்த வகையிலும் வன்முறைகள் நடைபெறக் கூடாது. அது குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.


பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள்- ஜனாதிபதி உறுதி. இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுமு; போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.போதைப்பொருள் ஒழிப்புக்காக தற்போதுள்ள அனைத்து பொலிஸ், இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்களை ஒன்றிணைத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தனியொரு நிறுவனமாக உருவாக்கி, அதற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும்.பாதாள உலகக் குழுகளுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.அத்துடன், நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ அனுமதிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.அடுத்த மாதத்தில், உங்களுக்கு இன்னொரு பாரிய பணியொன்று உள்ளது. ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, இத்தேர்தலை சட்டரீதியாக நடத்த வாய்ப்பளிப்பது பொலிஸ் திணைக்களத்தின் கடமையாகும்.ஜனாதிபதி என்ற வகையில் எனதும் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கடமையும் ஆகும்.அது மாத்திரமன்றி, தேர்தலுக்குப் பின்னரும் வன்முறைச் செயல்கள் நடப்பதற்கு இடமளிக்க முடியாது. நாம் அவற்றை நிறுத்த வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு எந்த வகையிலும் வன்முறைகள் நடைபெறக் கூடாது. அது குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement