• May 11 2024

முட்டை இறக்குமதி செய்வதில் புதிய சிக்கல் - அனுமதி கட்டாயம்!

Egg
Chithra / Jan 14th 2023, 2:52 pm
image

Advertisement

முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கட்டாயம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்ததன் பின்னர் இதற்கான டென்டர் அழைப்பின் போது அதற்காக முன்வந்த சர்வதேச விநியோகஸ்தர்களில் நூற்றுக்கு 90 சதவீதமானோர் இந்திய விநியோகஸ்தர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முட்டைகளை இறக்குமதி செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென்றாலும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

நாடு ஒன்றில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுமானால், குறித்த நாடு பறவைக் காய்ச்சல் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்தியாவில் அண்மைக்காலமாக பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், முட்டை இறக்குமதிக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க முடியாது என, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கட்டாயம் என்பதால், அதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறு வர்த்தக அமைச்சின் தொழில்நுட்ப குழு எழுத்துமூல அனுமதியை ஏற்கனவே கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.அத்தபத்து தெரிவித்தார்.


முட்டை இறக்குமதி செய்வதில் புதிய சிக்கல் - அனுமதி கட்டாயம் முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கட்டாயம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்ததன் பின்னர் இதற்கான டென்டர் அழைப்பின் போது அதற்காக முன்வந்த சர்வதேச விநியோகஸ்தர்களில் நூற்றுக்கு 90 சதவீதமானோர் இந்திய விநியோகஸ்தர்கள் என தெரிவிக்கப்படுகிறது.முட்டைகளை இறக்குமதி செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென்றாலும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.நாடு ஒன்றில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுமானால், குறித்த நாடு பறவைக் காய்ச்சல் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இந்தியாவில் அண்மைக்காலமாக பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், முட்டை இறக்குமதிக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க முடியாது என, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கட்டாயம் என்பதால், அதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறு வர்த்தக அமைச்சின் தொழில்நுட்ப குழு எழுத்துமூல அனுமதியை ஏற்கனவே கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.அத்தபத்து தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement