• Sep 19 2024

புதிய போராட்டம் ஜூன் 9 ஆரம்பம்- மக்கள் விடுதலை முன்னணி அறிவிப்பு..!samugammedia

Sharmi / May 28th 2023, 9:19 am
image

Advertisement

அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி புதிய  போராட்டத்தை ஆரம்பிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படவிருந்த நிலையில், தேர்தலை நடத்தப் பணமில்லை எனக்கூறி அரசாங்கம் அதனை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்தது.

எதிர்க்கட்சிகள் மற்றும் வேறு தரப்பினரும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நிதி நெருக்கடியைஅடிப்படையாக கொண்டுஇந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்த முடியாது என அரசாங்கம் நீதிமன்றத்தில் கூறியது.

இதற்கு அமைய நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கோரியதுடன் நிதியத்தின் உதவி கிடைத்து தற்போது மூன்று மாதங்கள் கடந்துள்ளன.
இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி மிகப் பெரிய போராட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய போராட்டம் ஜூன் 9 ஆரம்பம்- மக்கள் விடுதலை முன்னணி அறிவிப்பு.samugammedia அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி புதிய  போராட்டத்தை ஆரம்பிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படவிருந்த நிலையில், தேர்தலை நடத்தப் பணமில்லை எனக்கூறி அரசாங்கம் அதனை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்தது.எதிர்க்கட்சிகள் மற்றும் வேறு தரப்பினரும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நிதி நெருக்கடியைஅடிப்படையாக கொண்டுஇந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்த முடியாது என அரசாங்கம் நீதிமன்றத்தில் கூறியது.இதற்கு அமைய நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கோரியதுடன் நிதியத்தின் உதவி கிடைத்து தற்போது மூன்று மாதங்கள் கடந்துள்ளன.இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி மிகப் பெரிய போராட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement