• May 19 2024

தொழுகையை நிறுத்துமாறு கூறிய பாதுகாப்பு அதிகாரியால் பரபரப்பு..!samugammedia

Sharmi / May 28th 2023, 9:21 am
image

Advertisement

கனடாவில் உள்ள ரயில் நிலையத்தில் தொழுகையை நிறுத்துமாறு முஸ்லிம் நபரொருவரைக் கூறிய பாதுகாவலர் அவரது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

தன்னை அஹ்மத் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த பயணி இதுதொடர்பில் தெரிவித்திருப்பதாவது,

கனடாவின் வயா ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் துணை பாதுகாவர் ஒருவர், தான் தொழுகை செய்து முடித்தவுடன் தன்னிடம் வந்து 'இங்கே பிரார்த்தனை செய்ய வேண்டாம்' என்று கூறினார்.

'இங்கே பிரார்த்தனை செய்ய வேண்டாம். நீங்கள் இங்கே பிரார்த்தனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் மற்ற வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள், இது சரியா? அடுத்த முறை வெளியில் பிரார்த்தனை செய்யுங்கள்.' என கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தருணத்தை அந்த ரயிலில் இருந்த ஏனைய பயணிகள் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த காணொளி, வைரலாக பரவியது மற்றும் சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

இது தொடர்பாக வயா ரயில் நிலையத்துக்கு பொறுப்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

குறித்த அறிக்கையில்,

'வயா ரயிலின் ஒட்டாவா நிலையத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவரை இவ்வாறு இழிவு படுத்தியது வருந்தத்தக்கது.

வழிபாட்டுத் திறன் உட்பட, மதச் சுதந்திரத்தை, பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பயணி, இந்த சம்பவத்தினால் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தன்னுடைய தனிப்பட்ட கருத்து பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வயா ரயிலில் அவ்வாறு நடந்து கொண்ட குறித்த பாதுகாப்பு அதிகாரி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அதன் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை மேம்படுத்தவும் முறைகளில் செயல்பட்டு வருவதாக வயா ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொழுகையை நிறுத்துமாறு கூறிய பாதுகாப்பு அதிகாரியால் பரபரப்பு.samugammedia கனடாவில் உள்ள ரயில் நிலையத்தில் தொழுகையை நிறுத்துமாறு முஸ்லிம் நபரொருவரைக் கூறிய பாதுகாவலர் அவரது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்தன்னை அஹ்மத் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த பயணி இதுதொடர்பில் தெரிவித்திருப்பதாவது,கனடாவின் வயா ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் துணை பாதுகாவர் ஒருவர், தான் தொழுகை செய்து முடித்தவுடன் தன்னிடம் வந்து 'இங்கே பிரார்த்தனை செய்ய வேண்டாம்' என்று கூறினார்.'இங்கே பிரார்த்தனை செய்ய வேண்டாம். நீங்கள் இங்கே பிரார்த்தனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் மற்ற வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள், இது சரியா அடுத்த முறை வெளியில் பிரார்த்தனை செய்யுங்கள்.' என கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த தருணத்தை அந்த ரயிலில் இருந்த ஏனைய பயணிகள் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இதன் பின்னர் குறித்த காணொளி, வைரலாக பரவியது மற்றும் சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.இது தொடர்பாக வயா ரயில் நிலையத்துக்கு பொறுப்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது.குறித்த அறிக்கையில், 'வயா ரயிலின் ஒட்டாவா நிலையத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவரை இவ்வாறு இழிவு படுத்தியது வருந்தத்தக்கது.வழிபாட்டுத் திறன் உட்பட, மதச் சுதந்திரத்தை, பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குறித்த பயணி, இந்த சம்பவத்தினால் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தன்னுடைய தனிப்பட்ட கருத்து பதிவில் குறிப்பிட்டுள்ளார்.வயா ரயிலில் அவ்வாறு நடந்து கொண்ட குறித்த பாதுகாப்பு அதிகாரி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்திற்குப் பிறகு, அதன் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை மேம்படுத்தவும் முறைகளில் செயல்பட்டு வருவதாக வயா ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement