• May 11 2024

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிய விதிகள் அறிமுகம்!

Chithra / Dec 10th 2022, 5:37 pm
image

Advertisement

கிரிக்கெட்டில் மாற்று வீரர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது.கிரிக்கெட்டில் 11 வீரர்கள் களம் இறங்கி விளையாட முடியும். ஒருவேளை ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கலாம்.

ஆனால் இவரால் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. இதனால், ஒரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் காயம் அடைந்தால், அந்த அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

அதேபோல்தான் பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால், பந்து வீச்சில் சிரமம் ஏற்படும். இதனால் மாற்று வீரர்கள் ஏன் ஆக்டிவ் வீரராக செயல்படக் கூடாது? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், அது ஒரு அணிக்கு சாதகமாக முடிந்து விடும் என்பதால் ஐ.சி.சி. இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த முறையை அமல்படுத்தாமல் உள்ளது.

சில வருடங்களுக்கு முன், ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு அவரால் விளையாட முடியாது நிலை ஏற்பட்டால், மருத்துவர்கள் அறிவுரையின்படி மாற்று வீரரை களம் இறக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மாற்று வீரரை அக்டிவ் வீரராக செயல்பட பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

வரவிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதனை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஒரு அணியில் அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்கலாம். 7 இந்திய வீரர்கள் இடம் பெறவேண்டும். தற்போது இந்திய வீரரை மட்டும் மாற்றம் செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

அதன்படி மாற்று வீரராக களம் இறங்கும் வீரர் பந்து வீச முடியும். பேட்டிங் செய்ய முடியும். கால்பந்து, ரக்பி போன்ற போட்டிகளில் மாற்று வீரர்கள் ஆக்டிவ் வீரராக செயல்படுவார்கள். 

அதேபோன்று இதிலும் கொண்டு வர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்தியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சையது முஷ்டாக் அலி தொடரில் பரிசோதனை செய்யப்பட்டது.

அதற்கு வரவேற்பு கிடைக்கவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வரவிருக்கிறது. ஆனால், அதுகுறித்து முழுமையாக விதிமுறையை பி.சி.சி.ஐ. இன்னும் வெளியிடவில்லை. ஐ.பி.எல். அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகம் இறுதி முடிவை அறிவிக்கும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிய விதிகள் அறிமுகம் கிரிக்கெட்டில் மாற்று வீரர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது.கிரிக்கெட்டில் 11 வீரர்கள் களம் இறங்கி விளையாட முடியும். ஒருவேளை ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கலாம்.ஆனால் இவரால் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. இதனால், ஒரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் காயம் அடைந்தால், அந்த அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.அதேபோல்தான் பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால், பந்து வீச்சில் சிரமம் ஏற்படும். இதனால் மாற்று வீரர்கள் ஏன் ஆக்டிவ் வீரராக செயல்படக் கூடாது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.ஆனால், அது ஒரு அணிக்கு சாதகமாக முடிந்து விடும் என்பதால் ஐ.சி.சி. இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த முறையை அமல்படுத்தாமல் உள்ளது.சில வருடங்களுக்கு முன், ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு அவரால் விளையாட முடியாது நிலை ஏற்பட்டால், மருத்துவர்கள் அறிவுரையின்படி மாற்று வீரரை களம் இறக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மாற்று வீரரை அக்டிவ் வீரராக செயல்பட பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.வரவிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதனை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஒரு அணியில் அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்கலாம். 7 இந்திய வீரர்கள் இடம் பெறவேண்டும். தற்போது இந்திய வீரரை மட்டும் மாற்றம் செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.அதன்படி மாற்று வீரராக களம் இறங்கும் வீரர் பந்து வீச முடியும். பேட்டிங் செய்ய முடியும். கால்பந்து, ரக்பி போன்ற போட்டிகளில் மாற்று வீரர்கள் ஆக்டிவ் வீரராக செயல்படுவார்கள். அதேபோன்று இதிலும் கொண்டு வர பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்தியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் சையது முஷ்டாக் அலி தொடரில் பரிசோதனை செய்யப்பட்டது.அதற்கு வரவேற்பு கிடைக்கவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வரவிருக்கிறது. ஆனால், அதுகுறித்து முழுமையாக விதிமுறையை பி.சி.சி.ஐ. இன்னும் வெளியிடவில்லை. ஐ.பி.எல். அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகம் இறுதி முடிவை அறிவிக்கும்.

Advertisement

Advertisement

Advertisement