• Jan 15 2025

தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்க புதிய திட்டம் - கட்டாயமாகும் நடைமுறை

Chithra / Jan 12th 2025, 8:08 am
image

 

பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன இதனை தெரிவித்தார்.

நெல் தொடர்பாக தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

நெல் மற்றும் அரிசிக்கான உத்தரவாத விலையை ஒரே நேரத்தில் தீர்மானித்து வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் அரசு நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்க புதிய திட்டம் - கட்டாயமாகும் நடைமுறை  பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன இதனை தெரிவித்தார்.நெல் தொடர்பாக தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.நெல் மற்றும் அரிசிக்கான உத்தரவாத விலையை ஒரே நேரத்தில் தீர்மானித்து வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் அரசு நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement