• Nov 28 2024

தனுஸ் கோடியையும் இலங்கையையும் இணைக்கும் புது கடல் பாலம்! இலக்கு வைக்கும் இந்தியா

Chithra / Jan 23rd 2024, 8:31 am
image

 

அயோத்தி கோவிலை தொடர்ந்து, தனுஸ் கோடியையும் இலங்கையையும் இணைக்கும் புது கடல் பாலம் தொடர்பில் மத்திய அரசு திட்டமிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி இந்தியாவின் தனுஸ்கோடியை இலங்கையுடன் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கமைய சுமார் 23 கிலோமீற்றர் நீளமுள்ள பாலத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லி சென்றிருந்தபோதே இந்த திட்டம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்தநிலையில் இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பாலத்தை அமைக்க முடியுமா என்பதினை பார்க்க அரசு தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதன்படி இரண்டு நாடுகளைக் கடல் பாலம் மூலம் இணைக்க வேண்டும் என்பது குறித்துக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோரிக்கையாக விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனுஸ் கோடியையும் இலங்கையையும் இணைக்கும் புது கடல் பாலம் இலக்கு வைக்கும் இந்தியா  அயோத்தி கோவிலை தொடர்ந்து, தனுஸ் கோடியையும் இலங்கையையும் இணைக்கும் புது கடல் பாலம் தொடர்பில் மத்திய அரசு திட்டமிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி இந்தியாவின் தனுஸ்கோடியை இலங்கையுடன் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கமைய சுமார் 23 கிலோமீற்றர் நீளமுள்ள பாலத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த ஜூலை மாதம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லி சென்றிருந்தபோதே இந்த திட்டம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்தநிலையில் இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பாலத்தை அமைக்க முடியுமா என்பதினை பார்க்க அரசு தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.இதன்படி இரண்டு நாடுகளைக் கடல் பாலம் மூலம் இணைக்க வேண்டும் என்பது குறித்துக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோரிக்கையாக விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement