• Jan 26 2025

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு..!

Sharmi / Jan 11th 2025, 9:58 am
image

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்தனர். 

வர்த்தகம், சுற்றுலா வியாபாரம் மற்றும் இரு தரப்பு உட்பட பல தரப்பு ஒத்துழைப்பின் ஏனைய பிரதான துறைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் உலகச் சந்தையில் இலங்கை தயாரிப்புகளுக்கென புதிய சந்தர்ப்பங்களை ஆய்வு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார்.

நிரந்தர பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்கென தேசிய தொழிற்துறையை அபிவிருத்தி செய்யும் அதேநேரம் முன்னேறி வரும் சந்தைகளில் பலம்வாய்ந்த இருப்பை ஸ்தாபிப்பதன் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

தூதுக் குழு பிரதானிகளில் ஆர்.எஸ். கான் அஷார்ட், கட்டார் இராச்சியத்திற்கென பெயரிடப்பட்ட தூதுவர் டபிள்யு.ஜீ.எஸ்.பிரசன்ன, நியசிலாந்துக்கென பெயரிடப்பட்ட உயர்ஸ்தானிகர் எஸ்.கே.குணசேகர, ரஷ்ய அரசிற்கென பெயரிடப்பட்ட தூதுவர் எல்.பீ.ரத்னாயக்க, குவைத் இராச்சியத்திற்கென பெயரிடப்பட்ட தூதுவர் ஏ.எஸ்.கே.செனவிரத்ன, எகிப்து அரேபிய இராச்சியத்திற்கென பெயரிடப்பட்ட தூதுவர் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை பிரதமர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.



புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு. புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்தனர். வர்த்தகம், சுற்றுலா வியாபாரம் மற்றும் இரு தரப்பு உட்பட பல தரப்பு ஒத்துழைப்பின் ஏனைய பிரதான துறைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டது. வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் உலகச் சந்தையில் இலங்கை தயாரிப்புகளுக்கென புதிய சந்தர்ப்பங்களை ஆய்வு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தினார். நிரந்தர பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்கென தேசிய தொழிற்துறையை அபிவிருத்தி செய்யும் அதேநேரம் முன்னேறி வரும் சந்தைகளில் பலம்வாய்ந்த இருப்பை ஸ்தாபிப்பதன் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தூதுக் குழு பிரதானிகளில் ஆர்.எஸ். கான் அஷார்ட், கட்டார் இராச்சியத்திற்கென பெயரிடப்பட்ட தூதுவர் டபிள்யு.ஜீ.எஸ்.பிரசன்ன, நியசிலாந்துக்கென பெயரிடப்பட்ட உயர்ஸ்தானிகர் எஸ்.கே.குணசேகர, ரஷ்ய அரசிற்கென பெயரிடப்பட்ட தூதுவர் எல்.பீ.ரத்னாயக்க, குவைத் இராச்சியத்திற்கென பெயரிடப்பட்ட தூதுவர் ஏ.எஸ்.கே.செனவிரத்ன, எகிப்து அரேபிய இராச்சியத்திற்கென பெயரிடப்பட்ட தூதுவர் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கை பிரதமர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement