• Jan 11 2025

மீளாய்வு குழுவின் அறிக்கைக்கு அமைய அதானி குறித்து அடுத்த கட்ட தீர்மானம்! - அமைச்சர் நலிந்த

Chithra / Jan 8th 2025, 9:16 am
image

 

இந்தியாவின் அதானி நிறுவனத்துடனான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வினை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமையவே இது குறித்து அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். 

இலங்கையில் அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்த ஆய்வை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவுகள் உள்ளிட்ட காரணிகளை இந்தக் குழு மதிப்பாய்வு செய்யும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. 

முன்னதாக, இலங்கையில் அதானி குழுமத்தால் திட்டமிடப்பட்ட காற்றாலை மின் நிலைய திட்டங்கள் குறித்து மின் மற்றும் வலுசக்தி அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்தது.

மன்னார் மற்றும் பூநகரியில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் மூலம் மொத்தம் 484 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையிலேயே இவை தொடர்பில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஆய்வினை மீளாய்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீளாய்வு குழுவின் அறிக்கைக்கு அமைய அதானி குறித்து அடுத்த கட்ட தீர்மானம் - அமைச்சர் நலிந்த  இந்தியாவின் அதானி நிறுவனத்துடனான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வினை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமையவே இது குறித்து அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்த ஆய்வை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவுகள் உள்ளிட்ட காரணிகளை இந்தக் குழு மதிப்பாய்வு செய்யும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, இலங்கையில் அதானி குழுமத்தால் திட்டமிடப்பட்ட காற்றாலை மின் நிலைய திட்டங்கள் குறித்து மின் மற்றும் வலுசக்தி அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்தது.மன்னார் மற்றும் பூநகரியில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் மூலம் மொத்தம் 484 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையிலேயே இவை தொடர்பில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஆய்வினை மீளாய்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement