களுத்துறை பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் பகல்நேர வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர், பேரீச்சம் பழ பொதியை தனக்கு வழங்க மறுத்த பள்ளிவாயலின் மௌலவியைத் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மானியமாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழ பொதியை தனக்கு வழங்க மறுத்ததால் கோபமடைந்த குறித்த நபர் மௌலவியைத் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தாக்கப்பட்ட நபர் களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயலின் மௌலவி என்று கூறப்படுகிறது.
பேரீச்சம் பழ பொதி வழங்காதது தொடர்பாக சந்தேக நபர் மௌலவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான மௌலவி களுத்துறையில் உள்ள நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.
சந்தேக நபர் களுத்துறை கட்டுகுருந்த பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பேரீச்சம்பழ மானியம் வழங்கவில்லை; மௌலவியை தாக்கிய நபர் பொலிஸார் வலைவவீச்சு களுத்துறை பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் பகல்நேர வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர், பேரீச்சம் பழ பொதியை தனக்கு வழங்க மறுத்த பள்ளிவாயலின் மௌலவியைத் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மானியமாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழ பொதியை தனக்கு வழங்க மறுத்ததால் கோபமடைந்த குறித்த நபர் மௌலவியைத் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.தாக்கப்பட்ட நபர் களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயலின் மௌலவி என்று கூறப்படுகிறது.பேரீச்சம் பழ பொதி வழங்காதது தொடர்பாக சந்தேக நபர் மௌலவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.தாக்குதலுக்கு உள்ளான மௌலவி களுத்துறையில் உள்ள நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.சந்தேக நபர் களுத்துறை கட்டுகுருந்த பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.