• Mar 04 2025

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை - சிறீதரன் எம்.பி திட்டவட்டம்

Thansita / Mar 3rd 2025, 8:58 pm
image


வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம் 

இவ்வாறான இழுபறியில்  மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ளார் 

 கட்சி வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பதுபோல எமது கட்சி காணப்படுகின்றது. 

 இவ்வாறான சூழல் இருக்கும் போது முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.

இவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://web.facebook.com/24Samugam/videos/2428127914191101

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை - சிறீதரன் எம்.பி திட்டவட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்,மாகாண சபை தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம் இவ்வாறான இழுபறியில்  மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ளார்  கட்சி வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பதுபோல எமது கட்சி காணப்படுகின்றது.  இவ்வாறான சூழல் இருக்கும் போது முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.இவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்https://web.facebook.com/24Samugam/videos/2428127914191101

Advertisement

Advertisement

Advertisement