அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் 2023ஆம் ஆண்டில், அரச செலவில் லண்டன் சென்றதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.
2023ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் லண்டன் சென்றுள்ளார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்குப்பற்றுவதற்காக 2023 மே மாதம் 9ஆம் திகதி லண்டனுக்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான அமர்வில் கலந்துகொள்வதற்கான இரண்டாவதாக லண்டன் சென்றிருந்தார்.
அதனையடுத்து ஹவானாவில் நகரத்தில் இடம்பெற்ற G77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்தன் பின்னர், நியூயோர்க்கிற்கும் பின்னர் லண்டனுக்கும் பயணித்திருந்தார்.
மைத்ரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவின் வல்வர்ஹெப்டன் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் பதவி வழங்கும் நிகழ்வு அந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது.
அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நியூயோர்க்கிற்குச் சென்று வரும் வழியில் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
இந்த பயணங்களின்போது அவர் பல அரச தலைவர்களை சந்தித்திருந்ததுடன், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் மாநாடுகளிலும் பங்கேற்றிருந்தார்.
அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும் செல்லவில்லை ரணில் விளக்கம் அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் 2023ஆம் ஆண்டில், அரச செலவில் லண்டன் சென்றதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.2023ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் லண்டன் சென்றுள்ளார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்குப்பற்றுவதற்காக 2023 மே மாதம் 9ஆம் திகதி லண்டனுக்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான அமர்வில் கலந்துகொள்வதற்கான இரண்டாவதாக லண்டன் சென்றிருந்தார்.அதனையடுத்து ஹவானாவில் நகரத்தில் இடம்பெற்ற G77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்தன் பின்னர், நியூயோர்க்கிற்கும் பின்னர் லண்டனுக்கும் பயணித்திருந்தார். மைத்ரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவின் வல்வர்ஹெப்டன் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் பதவி வழங்கும் நிகழ்வு அந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது.அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நியூயோர்க்கிற்குச் சென்று வரும் வழியில் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.இந்த பயணங்களின்போது அவர் பல அரச தலைவர்களை சந்தித்திருந்ததுடன், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் மாநாடுகளிலும் பங்கேற்றிருந்தார்.