• Nov 25 2024

முன்னாள் அமைச்சர்க்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை - விமல் ரத்நாயக்க

Tharmini / Oct 26th 2024, 4:25 pm
image

முன்னாள் அமைச்சர்க்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை என விமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க, தெரிவித்ததாக இன்று (26) தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சிமாவட்டத்தின் வட்டக்கச்சி பகுதியில் இன்று (26) நடைபெற்றது. 

இதன் போது கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட தற்பொழுது நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அதிகமான வாக்குகளை பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அனைவரும் ஓர் மாற்றத்தையே விரும்புகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

 மேலும் தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கையிலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே அதிகளவான மதுபான சாலைகள் அனுமதிப்பத்திரம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு தெரிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள மதுபான சாலைகளை மூடுவதற்கான அதிகாரமும் மக்களிடம் உள்ளதாகவும் மதுபான சாலைகளை மூட வேண்டிய மக்களுக்கே உள்ளது தமது பகுதி கிராம சேவையாளர்  அவர்களுக்கு  தமது எதிர்ப்பினைதெரிவித்து  கடிதம் மூலமாகவும் அல்லது மாவட்டச் அரசு அதிபர் ஊடாக உங்கள் எதிர்ப்பு கடிதத்தினை  வழங்குவதன் மூலமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதற்கான அதிகாரமும் சட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு தெரிவிக்கையில் முன்னைய அமைச்சர்களாயினும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாயினும் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அனுமதி கேட்டால் வழங்கப்படுவதும் அவர்களுடனான புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதையும் வைத்து அவர்களை தமது கட்சியில்இணைத்துக் கொள்ளவோ  ஏற்றுக்கொள்வதாக கருதப்பட மாட்டார்கள் தமது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனங்களுக்கு அமைவாக 25 அமைச்சர்கள் மாத்திரமே  தமது கட்சியில் உள்ள உறுப்பினர்கள் மாத்திரமே வைத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக விமல் ரத்னாக அவர்கள் இன்று வட்டக்கச்சியில் தெரிவித்தார். 

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்றைய தினம் வட்டக்கச்சி பகுதியில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் விமல் ரத்னாயக்கா உள்ளிட் யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மருங்கன் மோகன் மற்றும் உதயகுமாரன் கீர்த்தி ஆகிய வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.







முன்னாள் அமைச்சர்க்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை - விமல் ரத்நாயக்க முன்னாள் அமைச்சர்க்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை என விமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க, தெரிவித்ததாக இன்று (26) தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சிமாவட்டத்தின் வட்டக்கச்சி பகுதியில் இன்று (26) நடைபெற்றது. இதன் போது கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட தற்பொழுது நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அதிகமான வாக்குகளை பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அனைவரும் ஓர் மாற்றத்தையே விரும்புகின்றார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கையிலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே அதிகளவான மதுபான சாலைகள் அனுமதிப்பத்திரம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு தெரிவிக்கையில் வழங்கப்பட்டுள்ள மதுபான சாலைகளை மூடுவதற்கான அதிகாரமும் மக்களிடம் உள்ளதாகவும் மதுபான சாலைகளை மூட வேண்டிய மக்களுக்கே உள்ளது தமது பகுதி கிராம சேவையாளர்  அவர்களுக்கு  தமது எதிர்ப்பினைதெரிவித்து  கடிதம் மூலமாகவும் அல்லது மாவட்டச் அரசு அதிபர் ஊடாக உங்கள் எதிர்ப்பு கடிதத்தினை  வழங்குவதன் மூலமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதற்கான அதிகாரமும் சட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு தெரிவிக்கையில் முன்னைய அமைச்சர்களாயினும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாயினும் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அனுமதி கேட்டால் வழங்கப்படுவதும் அவர்களுடனான புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதையும் வைத்து அவர்களை தமது கட்சியில்இணைத்துக் கொள்ளவோ  ஏற்றுக்கொள்வதாக கருதப்பட மாட்டார்கள் தமது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனங்களுக்கு அமைவாக 25 அமைச்சர்கள் மாத்திரமே  தமது கட்சியில் உள்ள உறுப்பினர்கள் மாத்திரமே வைத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக விமல் ரத்னாக அவர்கள் இன்று வட்டக்கச்சியில் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்றைய தினம் வட்டக்கச்சி பகுதியில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் விமல் ரத்னாயக்கா உள்ளிட் யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மருங்கன் மோகன் மற்றும் உதயகுமாரன் கீர்த்தி ஆகிய வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement