• May 20 2024

யாழில் முக்கிய அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Chithra / Jan 22nd 2023, 7:08 am
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் (சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப் பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகளும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு ஊர்காவற்துறை பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நவ லங்கா நிதஹஸ் பக்ஷயவின் வேட்புமனு வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை குழுக்களின் எந்த வேட்புமனும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


யாழில் முக்கிய அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் (சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப் பட்டுள்ளது.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகளும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு ஊர்காவற்துறை பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.நவ லங்கா நிதஹஸ் பக்ஷயவின் வேட்புமனு வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை குழுக்களின் எந்த வேட்புமனும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement