• Oct 06 2024

வடக்கு மக்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கே...! மஹிந்த அமரவீர சூளுரை...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 12:29 pm
image

Advertisement

சுதந்திரக் கட்சியால் தமக்கு ஏதேனும் நன்மை நடந்தது என்பது வடக்கு மக்களுக்குக் தெரியும். அதனால்தான் அன்றும் இன்றும் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் என்று சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுதந்திரக் கட்சியானது இனவாத, மதவாத ,வர்க்க வேறுபாடு அற்ற கட்சியாகும்.  அனைவரும்  அங்கம் வகிக்கக்கூடிய கட்சியாகவும் திகழ்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் கொப்பேகடுவ அன்று தோல்வி அடைந்தாலும்  வடக்கில் சுதந்திரக் கட்சிக்குத்தான் கூடுதல் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

எமது கட்சியின் தற்போதைய தலைவர் மைத் திரிபால சிறிசேன அண்மையில் வடக்குக்குச் சென்றபோது தமிழ் மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.

தமக்கு ஏதாவது நன்மை செய்த கட்சிதான் சுதந்திரக் கட்சி என்பது  அந்த மக்களுக்குத் தெரியும்.

இனவாதம் மதவாதம் அற்ற கட்சி என்பதால்தான் அனைத்து மக்களும் வரவேற்கின்றனர்.

புதிய கட்சிகள் உதயமாகலாம்  வளரும் வேகத்திலேயே அது அழியலாம் சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

வடக்கு மக்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கே. மஹிந்த அமரவீர சூளுரை.samugammedia சுதந்திரக் கட்சியால் தமக்கு ஏதேனும் நன்மை நடந்தது என்பது வடக்கு மக்களுக்குக் தெரியும். அதனால்தான் அன்றும் இன்றும் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் என்று சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,சுதந்திரக் கட்சியானது இனவாத, மதவாத ,வர்க்க வேறுபாடு அற்ற கட்சியாகும்.  அனைவரும்  அங்கம் வகிக்கக்கூடிய கட்சியாகவும் திகழ்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் கொப்பேகடுவ அன்று தோல்வி அடைந்தாலும்  வடக்கில் சுதந்திரக் கட்சிக்குத்தான் கூடுதல் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.எமது கட்சியின் தற்போதைய தலைவர் மைத் திரிபால சிறிசேன அண்மையில் வடக்குக்குச் சென்றபோது தமிழ் மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.தமக்கு ஏதாவது நன்மை செய்த கட்சிதான் சுதந்திரக் கட்சி என்பது  அந்த மக்களுக்குத் தெரியும். இனவாதம் மதவாதம் அற்ற கட்சி என்பதால்தான் அனைத்து மக்களும் வரவேற்கின்றனர்.புதிய கட்சிகள் உதயமாகலாம்  வளரும் வேகத்திலேயே அது அழியலாம் சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement