• Nov 25 2024

வடமாகாண மட்ட கரப்பந்தாட்ட விளையாட்டு போட்டி - யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் சாம்பியனாக முடிசூடிக்கொண்டது

Tharun / Jul 20th 2024, 8:34 pm
image

வட மாகாண மட்ட விளையாட்டு  போட்டியில் 16 வயதின் கீழ் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில்  யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் சாம்பியனாக முடிசூடிக்கொண்டது 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

2024ஆம் ஆண்டின் வட மாகாண மட்ட விளையாட்டு  போட்டிகளானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் 16 வயதின் கீழ் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியானது இன்றைய தினம்(20) யா /நடராஜா இராமலிங்கம்   வித்தியாலயத்தில் இடம் பெற்றது.  

இறுதிப்போட்டியில் யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் மற்றும் யா /புத்தூர்  சோமஸ்கந்தா கல்லூரியும் மோதிக்கொண்டன. இதில் முதல் சுற்றில் யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் 25 புள்ளிகளையும், யா /புத்தூர்  சோமஸ்கந்தா கல்லூரி 23 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டன. 

இரண்டாம் சுற்றில் யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் 25 புள்ளிகளையும், யா /புத்தூர்  சோமஸ்கந்தா கல்லூரி 18 புள்ளிகளையும் பெற்று யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் சாம்பியனாக முடிசூடிக்கொண்டது.  

யாழ் வலயத்தில், கோப்பாய்  கோட்டத்தில்  அமைந்துள்ள யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயமானது, 2024ஆம் ஆண்டின் வட மாகாண மட்ட விளையாட்டுப்   போட்டியில் இச்சாதனையை படைத்திருப்பது அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. அத்துடன் மாணவர்களின் கடின உழைப்பின் பயனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றிக்கு  முக்கிய காரணமாக, இதனை  நெறிப்படுத்திய அப்பாடசாலையின் அதிபர் ப.கமலதாசன் அப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஐங்கரன் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் டினூஜன் ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவையே இதற்கு காரணமாகும்.

இது போன்ற சாதனைகள் மாணவர்களுக்கு  உந்துதல் அளிக்கும் விதமாக திகழ்கின்றன. அப்பாடசாலை மாணவர்களின்  வெற்றியும் அவரது விளையாட்டு பயிற்றுவிப்பாளரின் அர்ப்பணிப்பும் ஏனைய மாணவர்களுக்கு மிகுந்த முன்மாதிரியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.


வடமாகாண மட்ட கரப்பந்தாட்ட விளையாட்டு போட்டி - யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் சாம்பியனாக முடிசூடிக்கொண்டது வட மாகாண மட்ட விளையாட்டு  போட்டியில் 16 வயதின் கீழ் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில்  யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் சாம்பியனாக முடிசூடிக்கொண்டது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,2024ஆம் ஆண்டின் வட மாகாண மட்ட விளையாட்டு  போட்டிகளானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் 16 வயதின் கீழ் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியானது இன்றைய தினம்(20) யா /நடராஜா இராமலிங்கம்   வித்தியாலயத்தில் இடம் பெற்றது.  இறுதிப்போட்டியில் யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் மற்றும் யா /புத்தூர்  சோமஸ்கந்தா கல்லூரியும் மோதிக்கொண்டன. இதில் முதல் சுற்றில் யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் 25 புள்ளிகளையும், யா /புத்தூர்  சோமஸ்கந்தா கல்லூரி 23 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டன. இரண்டாம் சுற்றில் யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் 25 புள்ளிகளையும், யா /புத்தூர்  சோமஸ்கந்தா கல்லூரி 18 புள்ளிகளையும் பெற்று யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம் சாம்பியனாக முடிசூடிக்கொண்டது.  யாழ் வலயத்தில், கோப்பாய்  கோட்டத்தில்  அமைந்துள்ள யா /ஆவரங்கால் மகாஜன வித்தியாலயமானது, 2024ஆம் ஆண்டின் வட மாகாண மட்ட விளையாட்டுப்   போட்டியில் இச்சாதனையை படைத்திருப்பது அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. அத்துடன் மாணவர்களின் கடின உழைப்பின் பயனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வெற்றிக்கு  முக்கிய காரணமாக, இதனை  நெறிப்படுத்திய அப்பாடசாலையின் அதிபர் ப.கமலதாசன் அப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஐங்கரன் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் டினூஜன் ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவையே இதற்கு காரணமாகும்.இது போன்ற சாதனைகள் மாணவர்களுக்கு  உந்துதல் அளிக்கும் விதமாக திகழ்கின்றன. அப்பாடசாலை மாணவர்களின்  வெற்றியும் அவரது விளையாட்டு பயிற்றுவிப்பாளரின் அர்ப்பணிப்பும் ஏனைய மாணவர்களுக்கு மிகுந்த முன்மாதிரியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement