• Nov 25 2024

இராணுவ மயமாக மாறியுள்ள வடமாகாணம்...! எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்ட கருத்துக்கு அம்பிகா சற்குணநாதன் கண்டனம்...!

Sharmi / May 3rd 2024, 11:39 am
image

வடமாகாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் சில தினங்களுக்கு முன்னர் வடமாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்நிலையில் இலங்கை வடபகுதி பாதுகாப்பு சிறப்பாக உள்ளது.எவரும் போர்க்காலத்திற்கு திரும்ப விரும்பவில்லை என எரிக் சொல்ஹெய்ம் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவு தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் வடபகுதி கடுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினர் சிவில் சமூகத்தினரை, மாற்றுக் கருத்டையவர்களை ஊடகங்களை கண்காணிக்கின்றனர்.துன்புறுத்துகின்றனர், அச்சுறுத்துகின்றனர்.

பொதுமக்களின் காணிகளை கைப்பற்றுவதன் மூலம் இராணுவம் தொடர்ந்தும் முகாம்களை விஸ்தரிக்க முயல்கின்றது.

இந்து வழிபாட்டுத் தலங்களை பௌத்த மதகுருமாரும் தொல்பொருள் திணைக்களமும் கைப்பற்றுவதற்கு இராணுவம் உதவுகின்றது. வேறு விதத்தில் சொல்வதானால் - வெள்ளையடித்தல் இலங்கை அரசாங்கம் அதன் திட்டங்களை முன்னெடுக்க உதவுதல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.






இராணுவ மயமாக மாறியுள்ள வடமாகாணம். எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்ட கருத்துக்கு அம்பிகா சற்குணநாதன் கண்டனம். வடமாகாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் சில தினங்களுக்கு முன்னர் வடமாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.இந்நிலையில் இலங்கை வடபகுதி பாதுகாப்பு சிறப்பாக உள்ளது.எவரும் போர்க்காலத்திற்கு திரும்ப விரும்பவில்லை என எரிக் சொல்ஹெய்ம் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.குறித்த பதிவு தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் கருத்து தெரிவிக்கையில்,இலங்கையின் வடபகுதி கடுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு தரப்பினர் சிவில் சமூகத்தினரை, மாற்றுக் கருத்டையவர்களை ஊடகங்களை கண்காணிக்கின்றனர்.துன்புறுத்துகின்றனர், அச்சுறுத்துகின்றனர்.பொதுமக்களின் காணிகளை கைப்பற்றுவதன் மூலம் இராணுவம் தொடர்ந்தும் முகாம்களை விஸ்தரிக்க முயல்கின்றது. இந்து வழிபாட்டுத் தலங்களை பௌத்த மதகுருமாரும் தொல்பொருள் திணைக்களமும் கைப்பற்றுவதற்கு இராணுவம் உதவுகின்றது. வேறு விதத்தில் சொல்வதானால் - வெள்ளையடித்தல் இலங்கை அரசாங்கம் அதன் திட்டங்களை முன்னெடுக்க உதவுதல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement