• Oct 02 2025

அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு

Chithra / Oct 1st 2025, 7:30 pm
image

பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுப் பணியில் உள்ள பட்டதாரி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் பல வழக்கு நடவடிக்கைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு இன்னும் முடிவடையாததால், 

அந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மேற்குறிப்பிட்ட பரீட்சை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மேலும் கூறுகிறது.


அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுப் பணியில் உள்ள பட்டதாரி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் பல வழக்கு நடவடிக்கைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு இன்னும் முடிவடையாததால், அந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மேற்குறிப்பிட்ட பரீட்சை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மேலும் கூறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement