• Nov 24 2024

ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Mar 14th 2024, 2:59 pm
image

 

நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2016 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்ட அவர்கள், 2019ஆம் ஆண்டு நியமனத்திற்கான சகல தகுதியினையும் பூர்த்தி செய்திருந்தனர்.

எனினும், கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி, அவர்களுக்கான நியமனம் வழங்கப்படாதிருந்தது. 

இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, அவர்களுடைய நியமனம் தொடர்பில் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது, 138 ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பதிலளித்ததாக இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு  நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.அந்தவகையில் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2016 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்ட அவர்கள், 2019ஆம் ஆண்டு நியமனத்திற்கான சகல தகுதியினையும் பூர்த்தி செய்திருந்தனர்.எனினும், கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி, அவர்களுக்கான நியமனம் வழங்கப்படாதிருந்தது. இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, அவர்களுடைய நியமனம் தொடர்பில் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.இதன்போது, 138 ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பதிலளித்ததாக இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement