• Jul 07 2024

தற்போது தேர்தல் பொருத்தமற்றது: ஆனால் தேர்தலுக்கு நாங்கள் தயார்-காதர் மஸ்தான் அதிரடி அறிவிப்பு!

Sharmi / Jan 9th 2023, 4:00 pm
image

Advertisement

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொருத்தமற்றது என்றும் ஆனால் தேர்தலை எதிர்கொள்வதற்கு தாம் தயாராகவே இருப்பதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேனவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அந்தந்த காலங்களில் தேர்தல் இடம்பெற வேண்டும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த காலகட்டத்தில் தேர்தல் நடாத்துவது என்பது பொருத்தமற்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் நடத்தவேண்டுமென ஒருபகுதியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் வேறு சிலர் தேர்தல் வேண்டாமெனவும் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இவ்வாறு இரண்டு விதமான வாதபிரதிவாதங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் நேரத்தில் தேர்தல்  இடம்பெறுவது சாத்தியமற்றது என்றும் காலம் தாழ்த்தியோ அல்லது இப்போதோ தேர்தல் இடம்பெற்றால் அதற்கு முகங்கொடுக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பொதுஜன பெரமுன கூட்டுக்கட்சிகளுடன் இணைந்து அதன் பொறுப்பில் வன்னி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் இந்த கூட்டுக்கட்சியில் ஐக்கிய தேசிய கட்சியும் இணைவது தொடர்பான  பேச்சு வார்த்தைகள் உள்ளதாகவும் தெரிவித்த காதர் மஸ்தான்  இன்னும் இதன் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தற்போது தேர்தல் பொருத்தமற்றது: ஆனால் தேர்தலுக்கு நாங்கள் தயார்-காதர் மஸ்தான் அதிரடி அறிவிப்பு நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொருத்தமற்றது என்றும் ஆனால் தேர்தலை எதிர்கொள்வதற்கு தாம் தயாராகவே இருப்பதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேனவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அந்தந்த காலங்களில் தேர்தல் இடம்பெற வேண்டும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த காலகட்டத்தில் தேர்தல் நடாத்துவது என்பது பொருத்தமற்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.தேர்தல் நடத்தவேண்டுமென ஒருபகுதியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் வேறு சிலர் தேர்தல் வேண்டாமெனவும் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இவ்வாறு இரண்டு விதமான வாதபிரதிவாதங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் நேரத்தில் தேர்தல்  இடம்பெறுவது சாத்தியமற்றது என்றும் காலம் தாழ்த்தியோ அல்லது இப்போதோ தேர்தல் இடம்பெற்றால் அதற்கு முகங்கொடுக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.அத்துடன் பொதுஜன பெரமுன கூட்டுக்கட்சிகளுடன் இணைந்து அதன் பொறுப்பில் வன்னி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் இந்த கூட்டுக்கட்சியில் ஐக்கிய தேசிய கட்சியும் இணைவது தொடர்பான  பேச்சு வார்த்தைகள் உள்ளதாகவும் தெரிவித்த காதர் மஸ்தான்  இன்னும் இதன் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement