• May 17 2024

இனி ஈ.டி.எஃப் செலுத்துகை இணையவழியில் மாத்திரம்! - வெளியான அறிவிப்பு

ETF
Chithra / Dec 27th 2022, 8:31 am
image

Advertisement

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இணைய (ஒன்லைன்) வழியாக மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ஈ.டி.எஃப்) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் தொழில்தருநர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தல் மற்றும் மாதாந்திர அறிக்கைகளை சமர்ப்பித்தல் என்பவற்றை இணைய வழியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக பணியிடத்தில் இருந்து பங்களிப்புகளை இலகுவாக செலுத்த முடியும் எனவும், நிறுவனத்தினால் பங்களிப்புகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஊழியர்கள் உறுதிப்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இனி ஈ.டி.எஃப் செலுத்துகை இணையவழியில் மாத்திரம் - வெளியான அறிவிப்பு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இணைய (ஒன்லைன்) வழியாக மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ஈ.டி.எஃப்) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் தொழில்தருநர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தல் மற்றும் மாதாந்திர அறிக்கைகளை சமர்ப்பித்தல் என்பவற்றை இணைய வழியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.இதனூடாக பணியிடத்தில் இருந்து பங்களிப்புகளை இலகுவாக செலுத்த முடியும் எனவும், நிறுவனத்தினால் பங்களிப்புகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஊழியர்கள் உறுதிப்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement